உங்கள் பொருளை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா?
அன்பான
வணிக பெருமக்களே,
வணக்கம்!
நீங்கள் உங்கள்
பொருள் / சேவையை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா?
வாடிக்கையாளர்கள் உங்களிடம் அடித்து அடிமட்ட விலைக்கு கேட்கிறார்களா?
அப்படி என்றால்
அது உங்கள் வடிக்கையாளர்கள் அல்ல நீங்கள் தவறான வாடிக்கையாளர்களிடம் பேசி கொண்டு இருக்கிறீர்கள்
எந்த பொருள்
/ சேவையை எடுத்தாலும் அதில் உயர்தரம், மத்தியதரம் மற்றும் குறைந்த தரம் என்று வகைப்படுத்தலாம்.
ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு தரப்பட்ட வடிக்கையாளார்கள் உள்ளனர்.
உதாரணமாக ஒரு சட்டை
ரூ100 க்கும் கிடைக்கும் ரூ500 க்கும் கிடைக்கும் ரூ200 க்கும் கிடைக்கும் அதற்கென
ஒரு வாடிக்கையாளர் கூட்டம் உள்ளது.
இப்போது நீங்கள்
உயர்தர பொருள் / சேவையை மத்திய தர மற்றும்
குறைந்த தர வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்லும் போது அடிமட்ட விலைக்கு பேரம் நடக்கும்.
அப்போது அந்த வாடிக்கையாளர் கூட்டத்தை விட்டுவிட்டு, அதற்கென உள்ள வாடிக்கையாளர்களை
அணுக வேண்டும்
சில சமயங்களில்
அதே தர பொருளை அதே தர வாடிக்கையாளர்களிடம் விற்க முடியவில்லையா? நீங்கள் உங்களது பொருளின்
மதிப்பைப் பற்றி சரியாக சொல்லவில்லை என்று அர்த்தம்.
இதோ சில நுணுக்கங்கள்.
1.
எதற்காக
உங்கள் பொருள் சேவையை வாங்குகிறார்கள்
2.
அதை
வாங்க விட்டால் வரும் நஷ்டம் / கஷ்டம்
3.
அந்த
நஷ்ட கஷ்டங்களை விளக்கிக் கூற வேண்டும்
உதாரணம்
வாடிக்கையாளர்: இந்த சட்டை என்ன விலை?
நீங்கள்: 500ரூபாய்
வாடிக்கையாளர்: ஏன் இவ்வளவு விலை மிகவும் அதிகம். 100 ரூபாய்க்கே
கிடைக்கிறதே.
நீங்கள்: எதற்காக இந்த சட்டையை வாங்குகிறீர்கள்?
வாடிக்கையாளர்: Interview செல்ல
நீங்கள்: ஒரு வேலை இந்த சட்டையை வாங்காமல் குறைந்த
விலை சட்டையை அனைத்து கொண்டு சென்றால் உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்குமா Interview
இல் பேச முடியுமா? இல்லை அந்த Interview வீணாகிவிடும். அதனால் எத்தனை பிரச்சனைகள் உங்கள்
வாழ்வில் ஏற்படும். இந்த சட்டை வாங்கினால் நல்ல மகிழ்ச்சியாக சென்று அசத்துங்கள்.
வாடிக்கையாளர்: சரி 500 ரூபாய்க்கு நான் வாங்கிக்கொள்கிறேன்.
நீங்கள் எப்பொழுதும் உங்கள் பொருளின்
மதிப்பையும் உங்கள் பொருளை வாங்காவிட்டால் ஏற்பட்டும் கஷ்டங்களையும் உங்கள் பொருளை
வாங்கினால் ஏற்படும் மகிழ்ச்சியையும் எடுத்துச் சொல்ல வேண்டும்
நன்றி
S. இளங்கோ
தொழில் ஆலோசகர்
BMQR
9380651503
Comments
Post a Comment