![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCgX4lgCyPkFrBynqsFQeQiIO3OLK4p63ELsnnHqlrkKKrwP4p3ylba72J6XgZJANnwOqtUnigvh59_zMeEMNXa2AZ8BDkRnS3jafaGExRJi-ZleZsnucCEAxDA7q_B9xn0YP1zZnGt87w/s640/sales_going_up.jpg)
உங்கள் பொருளை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா? அன்பான வணிக பெருமக்களே, வணக்கம்! நீங்கள் உங்கள் பொருள் / சேவையை அதிக விலைக்கு விற்க முடியவில்லையா? வாடிக்கையாளர்கள் உங்களிடம் அடித்து அடிமட்ட விலைக்கு கேட்கிறார்களா? அப்படி என்றால் அது உங்கள் வடிக்கையாளர்கள் அல்ல நீங்கள் தவறான வாடிக்கையாளர்களிடம் பேசி கொண்டு இருக்கிறீர்கள் எந்த பொருள் / சேவையை எடுத்தாலும் அதில் உயர்தரம், மத்தியதரம் மற்றும் குறைந்த தரம் என்று வகைப்படுத்தலாம். ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு தரப்பட்ட வடிக்கையாளார்கள் உள்ளனர். உதாரணமாக ஒரு சட்டை ரூ100 க்கும் கிடைக்கும் ரூ500 க்கும் கிடைக்கும் ரூ200 க்கும் கிடைக்கும் அதற்கென ஒரு வாடிக்கையாளர் கூட்டம் உள்ளது. இப்போது நீங்கள் உயர்தர பொருள் / சேவையை மத்திய தர மற்றும் குறைந்த தர வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்லும் போது அடிமட்ட விலைக்கு பேரம் நடக்கும். அப்போது அந்த வாடிக்கையாளர் கூட்டத்தை விட்டுவிட்டு, அதற்கென உள்ள வாடிக்கையாளர்களை அணுக வேண்டும் சில சமயங்களில் அதே தர பொருளை அதே தர வாடிக்கையாளர்களிடம் விற்க முடியவில்லையா? நீ...